*அனுபவம்?* வயதான பெண்மணி ஒருவர், கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை மோசம். அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள். அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் கட்டி விடுவேன். அவளுக்கு, எந்தவித வித்தியாசத்தையும் காண முடியாது. அந்த வயதான பெண்மணி பழவியாபாரியை நெருங்கிய போது, அவர் கூறினார், “இன்றைக்கு மார்க்கெட்டில் இருப்பதிலேயே, இவைதான் புத்தம் புதிய, மிகச் சிறந்தவை. நீங்கள், உங்கள் கண்களை மூடிக் கொண்டே, எந்தப் பழத்தை வேண்டுமானாலும், தெரிவு செய்ய முடியும். ஆனால், அந்த வயதான பெண், சற்று வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தாள். அவள் வியாபாரியிடம் கூறினாள்,“இந்த புதிய பழங்கள் சட்னி செய்வதற்காக தேவைப் படுகிறது. அதற்காக எனக்கு, கொஞ்சம் அதிகமாக பழுத்த பழங்கள் வேண்டியதாக இ...
Tamil blog under NQH by Dr.VAM