- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* * International Child Rights Day* ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் உரிமைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜ...