முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒருவரின் பதிவு

#மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒருவரின் பதிவு பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். ‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’  பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், “உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. “குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடி...

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை..!

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி...! இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது காரணம் ... எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம்... இனி, இளைப்பாற விரும்புகிறோம்... அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம்... ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்... நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்... அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்... இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்... ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே... இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்... ஏனென்றா...

ரத்தன் டாடா பிசினஸ் சாம்ராஜ்யம் கடந்து வந்த பாதை

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா. தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார். அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அற...